gov logo

கூட்டுத்தாபனத்தின் வரலாறு

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் 1957ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க அரச கைத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் 1964ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கூட்டுத்தாபனத்தின் நோக்கம் முழு மீன்பிடித்துறையையும் உள்ளடக்கியிருந்தது. கூட்டுத்தாபனத்தின் நோக்கம் 1964 ஒக்டோபர் 01ஆம் திகதியிட்ட 14186ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் கீழுள்ளவாறு தரப்பட்டிருந்தது.

  • ஆழ் கடல் மீன் பிடித்தலின்போது இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன் உற்பத்தி செய்வதில் கூட்டுத்தாபனம் நேரடியாக அல்லது அதிகாரம் பெற்ற முகவர்கள் ஊடாக ஈடுபடுதல்.
  • கூட்டுத்தாபனம் நேரடியாக அல்லது அதிகாரம் பெற்ற முகவர்கள் ஊடாக மீன்களைப் பதனிடுவதிலும் (தகரத்தில் அடைத்தல், உலரவைத்தல், பதனிடுதல்) மீன் உற்பத்தியை துணை உற்பத்தியாகத் தயாரிப்பதிலும் ஈடுபடுதல்.
  • கூட்டுத்தாபனம் நேரடியாக அல்லது அதிகாரம் பெற்ற முகவர்கள் ஊடாக மீன்களை சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்வதிலும் விநியோகிப்பதிலும் ஈடுபடுதல்.
  • மீன்பிடித் துறைமுகங்கள், குளிர் களஞ்சிய அறைகள் உட்பட நங்கூரமிடும் துறைகள் என்பவற்றை நிர்மாணித்தல் மற்றும் பராமரித்தல்.
  • மீன்பிடி கைத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்களையும் மீன்பிடி கருவிகளையும் இறக்குமதிசெய்தல் மற்றும் விற்பனைசெய்தல்.
  • கடற்றொழிலை அபிவிருத்திசெய்வதை நோக்கமாகக்கொண்டு கடற்றொழில் திணைக்களம் அல்லது ஏனைய அரச திணைக்களம் என்பவற்றிற்காகவும் அவற்றின் சார்பிலும் கூட்டுத்தாபனம் செயலாற்ற வேண்டும்.
  • மீன்பிடி கைத்தொழிலுக்காக சிறிய படகுகளையும் சிறய கப்பல்களையும் நிர்மாணித்தல்.
  • மீன்பிடி படகுகளைப் பராமரிப்பதற்கும் பழுதுபார்ப்பதற்கும் வசதியளித்தல்.
  • மீன்பிடி கருவிகளைத் தயாரித்தல் மற்றும் விற்பனைசெய்தல். இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் நியதிச்சட்ட அரச அமைப்பாகும். இது முழுமையாக அரசுக்கு உரியதாகும். இது கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள மீன்பிடி கைத்தொழிலின் முதன்மை நிறுவனமாக தனி அந்தஸ்தைக்கொண்டுள்ளது.

தற்கால நிலை - தற்போதைய நடவடிக்கைகள்

  • தற்பொழுது இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் மேற்கொள்ளுகின்ற பிரதான வியாபார நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.
  • பிராந்திய அலுவலகங்கள் ஊடாக மீனவர்களிடமிருந்து நேரடியாக மீன்களைக் கொள்வனவுசெய்தல்.
  • மீன்களை இறக்குமதிசெய்தல்.
  • எமது சில்லறை மீன் விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் மீன்களை விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல்.
  • நுகர்வோரின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக பைக்கட்டில் அடைக்கப்பட்ட மீன்களை லக் சதொச, கோப் சிட்டி போன்ற அரச நிறுவனங்கள் ஊடாக மீன்களை விற்பனைசெய்தல்.
  • அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மீன் விநியோகித்தல்.
  • கிராமிய பிரதேசங்களில் நடமாடும் மீன் விற்பனை நிலையங்களை நடாத்துதல்.
  • ஜனரஞ்சகமான நகரங்களில் மீன்விற்பனை சந்தைகளை நடத்துதல்.
  • மீன் துண்டுகளை தயாரித்தலும் விற்பனை செய்தலும்.
  • மீன்பிடித்துறைக்கும் ஏனைய வர்த்தகர்களுக்கும் ஐஸ் விற்பனை செய்தலும் ஐஸ் தயாரித்தலும்.
  • மீன்பிடித்துறைக்கும் ஏனைய வர்த்தகர்களுக்கும் குளிரூட்டப்பட்ட அறை வசதிகளை வழங்குதல்.
  • வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கு மீன் பதப்படுத்தும் வசதிகளை அளித்தல்.
  • வெளிநாட்டு மீன்பிடி படகுகளிலிருந்து மீன்களைக் கொள்வனவுசெய்தல்.
FaLang translation system by Faboba