gov logo

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன சில்லறை விற்பனைக் கூடங்கள்

cfc fish retail outlet

கூட்டுத்தாபனம் அதன் சொந்த பணியாட்தொகுதியினரை ஈடுபடுத்தி நாடளாவிய ரீதியில் 105 சில்லறை விற்பனை கூடங்களை நடாத்துகின்றது. இவற்றின் ஊடாக நுகர்வோருக்கு ஒழுங்காகவும் நியாய விலையிலும் மீனை விற்பனைசெய்கிறது.

 

நடமாடும் விற்பனை நிலையங்கள் மற்றும் மீன்சந்தை நுகர்வோர் விற்பனைகள்

சில்லறை விற்பனை கூடங்கள் மூலம் மீன்களை விற்பனைசெய்வற்கு மேலதிகமாக, கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் ஏனைய மாவட்டங்களிலும் நிரந்தர விற்பனை கூடங்களை ஸ்தாபிக்க முடியாமல் உள்ள இடங்களில் நடமாடும் மீன் விற்பனை கூடங்கள் நடத்தப்படுகின்றன.

தெரிவுசெய்யப்பட்ட பிரதான நகரங்களில் மீன் சந்தை அல்லது மீன் விற்பனை செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீன் சந்தை மாளிகாவத்தை, எத்துல் கோட்டே, குருணாகல், நீர்கொழும்பு, அநுராதபுரம், வத்தளை ஆகிய பிரதேசங்களில் ஒவ்வொரு வாரமும் குறிப்பிடப்பட்ட ஒரு நாளில் நடைபெறுகிறது.

லங்கா சதொச

வரையறுக்கப்பட்ட லங்கா சதொசவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அதன் பைக்கட்டில் அடைக்கப்பட்ட மீன்களை லங்கா சதொச விற்பனைக்கூடங்கள் ஊடாக தரகு அடிப்படையில் சில்லறையாக விற்பனைசெய்கிறது. தற்பொழுது நாடளாவிய ரீதியில் 200 சதொச விற்பனைக்கூடங்கள் ஊடாக கூட்டுத்தாபன மீன்களை சில்லறையாக விற்பனைசெய்கிறது. இந்த விசேட கருத்திட்டம் நுகர்வோரின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கின்ற நிகழ்ச்சித்திட்டமாகும்.

நகர பிராந்தியம்

இந்த பிரிவு கொழும்பு மாவட்டத்திலும் பேலியகொட சந்தைத் தொகுதியில் சில்லறை விற்பனை கூடங்களிலும் மீன் மொத்த விற்பனையை நடத்துகின்றது. இந்த விற்பனை நடவடிக்கைகளின் ஊடாக திறந்த சந்தையில் நிலவுகின்ற மீன் விலையைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

FaLang translation system by Faboba