gov logo

சந்தைப்படுத்தும் பிராந்தியங்கள்

சந்தையிலுள்ள போட்டி விலைகளுக்கு நுகர்வோருக்கு குறித்த பிராந்தியங்களில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்கள் ஊடாக மீன்களை விநியோகிப்பதும் விற்பனைசெய்வதும் சந்தைப்படுத்தல் பிராந்தியங்களின் செயற்பாடாகும். கூட்டுத்தாபனத்தின் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் ஏறக்குறைய 105 சில்லறை விற்பனை நிலையங்களும்  மொத்த விற்பனை நிலையங்களும் இருக்கின்றன.

உற்பத்தி பிராந்தியங்கள்

நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப சந்தைப்படுத்தல் பிராந்தியங்களுக்கு தேவையான மீன்களைக் கொள்வனவுசெய்து விநியோகிப்பது இந்த பிராந்தியங்களின் செயற்பாடாகும்.

அரச விநியோக பிரிவு

அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் மீன் உற்பத்திகளை அரசாங்க வைத்தயசாலைகளுக்கு வழங்குகின்றது. அதற்கு மேலதிகமாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் மீன்களை விநியோகிக்கின்றது.

கொள்வனவு, விற்பனை மற்றும் விநியோக பிரிவு

தொகை கையிருப்பைப் பேணுகின்ற அதேவேளையில் உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து மீன்களைக் கொள்வனவுசெய்து கூட்டுத்தாபன பிராந்தியங்களுக்கும் தனியார் வர்த்தகத்துக்கும் மொத்தவிற்பனை அடிப்படையில் விநியோகிப்பது இந்தப் பிரிவின் பிரதான செயற்பாடாகும். கூட்டுத்தாபனத்தின் பிரதான வருமானம் இந்தப் பிரிவின் வேலைகளிலிருந்தே பெறப்படுகின்றது.

உற்பத்தி மேம்படுத்தல் மற்றும் விற்பனை மேம்பாட்டு பிரிவு

fish packaging

கூட்டுத்தாபனத்தின் சில்லறை விற்பனை கூடங்கள், லங்கா சதொச விற்பனை கூடங்கள், கோப் சிட்டிகள் மற்றும் கார்கில்ஸ் புட் சிட்டி என்பவற்றின் ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக கடுங் குளிரூட்டப்பட்ட மீன்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள கையிருப்புகளிலிருந்து வெட்டி பைகளில் அடைக்கப்பட்ட மீன்கள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பது இந்தப் பிரிவின் செயற்பாடாகும்.

 

மின்னேரிய மீன்களைத் துண்டுகளாக்கும் கருத்திட்டம்

tilapia fillets

கூட்டுத்தாபனத்தின் சில்லறை விற்பனை கூடங்கள், லக் சதொச விற்பனை கூடங்கள், கோப் சிட்டிகள் மற்றும் ஹோட்டல்கள் என்பவற்றின் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்காக கடுங் குளிரூட்டப்பட்ட மீன்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள கையிருப்புகளிலிருந்து வெட்டி பைகளில் அடைக்கப்பட்ட மீன்கள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பது இந்தப் பிரிவின் செயற்பாடாகும்.

FaLang translation system by Faboba